Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழக்கறிஞருக்குக் கொலை மிரட்டல் – ஓட்டல் மேலாளர் கைது!

வழக்கறிஞருக்குக் கொலை மிரட்டல் – ஓட்டல் மேலாளர் கைது!

தில்லை நகரில் கரும்பு கடை வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி குடமுருட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45) இவர் தில்லைநகரில் கரும்புச்சாறு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் குப்பங்குளம் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தென்னூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (21) என்பவர் செல்வத்திடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி செல்வத்திடம் ரூபாய் 500 படித்த அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்தனர்.

பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது

திருச்சி பாலக்கரை தர்மநாத புரத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது 55) இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் நித்திஷ் (வயது 23) இருவருக்கும் இடையே தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக நேற்று முன்தினம் நித்திஷ், செல்வராணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நித்திசை கைது செய்தனர்.
திருச்சியில்

வாலிபர்ரை பீர் பாட்டிலால் குத்திய 2 பேர் கைது

திருச்சி தில்லைநகர் 10 வது கிராசை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் சம்பவத்தன்று 80 அடி ரோட்டில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், சக்திவேல் (வயது 23), அஜித்குமார் (வயது 28), செந்தில் ஆகிய நான்கு பேரும் அங்கு வந்து ராஜாவிடம் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ராஜாவுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் ராஜாவின் இளைய சகோதரரான மணிகண்டன் என்பவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஞ்சித் மற்றும் செந்தில் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் மேலாளர் கைது

திருச்சி முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் திலீபன் (வயது 41). இவர் திருச்சி கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். சம்பவத்தன்று இவர் திருச்சி- திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த அருள் அரசன் (வயது 29)என்பவர் அந்த ஓட்டலில் காசாளராக வேலை செய்து வருகிறார். அப்போது திலீபன் சாப்பிடுவதற்காக பார்சல் கேட்டபோது அவருக்கும் அருள் அரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருள் அரசன், திலீபனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து திலீபன் செசன்ஸ்கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள் அரசனை கைது செய்தனர்.

படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு

திருச்சி ஜே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் சுஜிதா பேகம். இவரது மகன் முகமது அல்தாப் உசேன் (வயது 16). இவர் கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திடீரென இவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிண்டி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் கஞ்சா புகையிலை பொருட்களை விற்பனை- 7 பேர் கைது– 200 கி கஞ்சா பறிமுதல்

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அரியமங்கலம், பாலக்கரை, திருச்சி அரசு மருத்துவமனை, கண்டோன்மெண்ட் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 23) என்பவர் முல்லை நகரில் கஞ்சா விற்பனை செய்ததாக அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியை சேர்ந்த அபூபக்கர் (வயது44) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் புங்கனூர் ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த சியாம் மற்றும் கீர்த்திஷ்வரன் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை விற்பனை செய்தனர். அதன் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கீர்த்தீஸ்வரனை கைது செய்தனர். மேலும் இதே போல் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த மதிவாணன் (வயது 38) என்பவர் வழி விடு முருகன் கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக கண்டோன்மென்ட் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த சியாம் என்பவரை திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் தேடி வருகின்றார்கள். இவர்களிடம் இருந்து மொத்தம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!