நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், இருக்கைக்கு அடியில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியை ரயிலில் இணைக்கும் பணியின்போது துர்நாற்றம் வீசியதால் ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நாகர்கோவில் ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
