மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் உள்ள டோல் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாட்டை சேர்ந்த வி.பாலகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள்

கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் ஆகியோர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
