Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை மைதானத்தில்…….நடுவரிடம் டோனி வாக்குவாதம் செய்தது ஏன்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று ஆட்டக்காரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார். அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரை பந்துவீச கேப்டன் டோனி அழைத்த போது, நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார்.  எனவே உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறினார். இதனால் அதிருப்திக்குள்ளான டோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். பிறகு நடுவரின் சம்மதத்துடன் அந்த ஓவரை பதிரானா வீசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!