10-ஆண்டு காலம் கவுன்சிலராக பணியாற்றிய சொந்த கிராமத்திற்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோ, மீண்டும் இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு நாள்தோறும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில், இன்று அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட

மொஞ்சனூர், கோடந்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கடை வைரமடை உடையாம்பாளையம் மூலத்துறை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் மீண்டும் ஆட்சி அமைந்தால் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்களிடம் பேசிய திமுக வேட்பாளர்:
நான் கவுன்சிலாக இருந்தபோது அமைக்கப்பட்ட சாலை 15 ஆண்டுகாலம் ஆகியுள்ளது ஆட்சி அமைந்த உடன் சாலை அமைத்து தரப்படும், மொஞ்சனூர் பகுதியில் 10 ஆண்டுகளாக கவுன்சிலராக பணியாற்றி வந்தேன், தொடர்ந்து ஐந்தாண்டு காலம் எம்எல்ஏவாக பணியாற்றினேன் தற்போது தலைவர் எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளார் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம், ஆனால் நம் கிராமம் மக்கள் 90 சதவீதம் வாக்கு உதயசூரியனுக்கு விழ வேண்டும் அப்பொழுது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று தெரியும், நான் எம்எல்ஏ என்றால் நீங்களும் எம்எல்ஏ மாதிரி என கூறினார்.
