Skip to content
Home » ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

  • by Senthil

திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி தரப்படும்  அறிவித்தார். இது தொடர்பான வீடியோவும்  வெளியானது.

கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில்

சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பாஜகவினர் பேசி வருகிறார்கள்.

இந்த கருத்துக்களை வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் பாஜக வினர்  போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

திமுக சார்பில் “போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்” என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பெரிய அளவில் கோவை மாநகரம் முழுவதும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

அதே சமயம் பாஜக வினர் “சனாதனம் எங்கள் உயிர் மூச்சு” என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்கள் மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம்  உள்ளிட்ட பல இடங்களில்  ஒட்டப்பட்டுள்ளது. அவற்றை மக்கள்  படித்து  பார்த்தபடி செல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!