Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் மறியல் வழக்கில் திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் விடுவிப்பு!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க கோரியும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு கோரியும் தஞ்சை ரயில் நிலையத்தில் கடந்த 20-1-2017-ம் ஆண்டில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும் திருவையாறு எம்.எல்.ஏ.வுமான துரை சந்திரசேகரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அப்போது
மயிலாடுதுறை – திருச்சி பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ மற்றும் 179 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மீதான வழக்கு தஞ்சாவூரில் உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ ஆஜரானார். அவரது சார்பில் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், தி.மு.க மாநகர வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் ஆர். அன்பழகன், வக்கீல் எஸ். ஜெயச்சந்திரன் ஆகியோர் வாதாடினர்.
வழக்கை நீதிபதி கனிமொழி விசாரித்து இந்த வழக்கிலிருந்து துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை விடுவித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!
Secret Link