கரூர் புதிய பேருந்து நிலையத்தில் திமுக ஆட்சியின் வைக்கப்பட்ட புகைப்படங்கள் அகற்றம் –முதல்வர் விஜய் புகைப்படங்கள் வைக்கும் பணி தீவிரம்.
கரூர் புதிய பேருந்து நிலைய நிழற்கூடப் பகுதியில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த விளம்பர புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த புகைப்படங்களை மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மாற்றாக முதலமைச்சர் விஜய்யின் திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற கரூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும், திமுக கவுன்சிலர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது புகைப்படங்கள்

அகற்றப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கரூர் மாநகரப் பகுதியில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, புகைப்படங்கள் அகற்றப்படும் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
