Skip to content
Home » தேமுதிக-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்… நலத்திட்ட உதவி வழங்கல்..

தேமுதிக-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்… நலத்திட்ட உதவி வழங்கல்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 ம் ஆண்டு கட்சி துவக்க நாள் விழாவை முன்னிட்டு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,தேமுதித தலைவர் விஜயகாந்த் செய்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 ம் ஆண்டு கட்சி துவக்க நாள் விழாவை முன்னிட்டு, தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தெற்கு மாவட்ட செயலாளர் செயலாளர் பாரதிதாசன், மாநகர செயலாளர்டிவி கணேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர்கள் கே. எஸ். குமார், பாரதிதாசன், டி.வி. கணேஷ் ஆகியோர் தேமுதிக நிறுவன

தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் செய்த சாதனைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விவசாய அணி துணைச் செயலாளர் டெல்லி சாமிநாதன் ஆளுங்கட்சி செய்த ஊழல்களையும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் செய்த சாதனைகளையும் குறித்து எழுச்சி உரையாற்றினார். அப்போது பேசிய டெல்லி சுவாமிநாதன் கடந்த 17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக கட்சி தீவை மீட்காமல் தற்போது பாராளுமன்ற தேர்தல் வருவதால் கச்சை தீவை மீட்போம் என தமிழக முதல்வர் பேசி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஏழை,எளிய பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த முப்பெரும் விழாவில் உயர்மட்ட குழு உறுப்பினர் நடராஜன், தேர்தல் பிரிவு செயலாளர் தங்கமணி, மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாற்றுத்திறனாளி அணி துணை செயலாளர் வாஞ்சி குமரவேல், தொழிற்சங்க அமைப்பு சாரா செயலாளர் திருப்பதி, முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார்,முன்னால் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் விஜயராஜன் மற்றும் லால்குடி,மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய நகர பகுதி கிளைக் கழக செயலாளர்கள் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!