Skip to content
Home » மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் (55) . இவர்அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார். இவருக்கு  வசந்தி (46) மனைவியும் , பாலாஜிநாராயணன் (25)மகனும் ,மைதிலி  (23)என்ற மகளும் உள்ளார். இதில் பாலாஜிசரவணன் ரஷ்யாவில் 6ஆண்டுகள் மருத்துவ படிப்பை படித்துவிட்டு இந்தியா வந்து 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்றார். கொரோனா காலங்களில் திருப்பூர், ஈரோடு பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டாக்டர் பாலாஜி நாராயணன் மருத்துவ சேவை புரிந்துள்ளார். அண்மையில் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இந்நிலையில்டாக்டர் பாலாஜி நாராயணன் மருத்துவ மேற்படிப்பு படிக்க வீட்டிலிருந்து படிப்பதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக பொள்ளாச்சி வெங்கட்ரமண வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் பாலாஜி நாராயணனுடன் மருத்துவ படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த திலீப் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் .

இந்நிலையில் அவரது 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டாக்டர் பாலாஜி நாராயணன் கடந்த 26 -ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து தனியார் பஸ் மூலம் சென்னை  சென்று பல்லாவரத்தில் நண்பன் திலீப்  துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மகன் அசோக்

நாராயணன் வீட்டில் பாலாஜி நாராயணன் தங்கினார். 28-ம் தேதிஇரவு  பொள்ளாச்சி திரும்புவதற்காக தனியார் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்திருந்தார். 28 -ம் தேதி இரவு பஸ்சுக்கு செல்வதற்காக வீட்டில் லிப்டில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்த போது திடீரென உடல்நிலை சரியில்லை என கூறிய டாக்டர்பாலாஜி நாராயணன். அப்படியே மயங்கி கீழே விழுந்தார். அதன் பின்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை கொண்டு சென்று உடலை பரிசோதித்துப் பார்த்தபோது. பாலாஜி நாராயணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பொள்ளாச்சி டாக்டர்பாலாஜி நாராயணன். நண்பனின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்தவர். இறந்து போன சம்பவம் பொள்ளாச்சியில் உள்ள அவரது தந்தை முரளிக்கு தெரியப்படுத்தப்பட்டது தகவலை கேட்ட முரளியின் மனைவி மகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை விரைந்து அவர்கள் மகன் பாலாஜி நாராயணன் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு பொள்ளாச்சி கொண்டு வந்து பாலாஜி நாராயணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே பாலாஜி நாராயணன் தனது இரண்டு கண்களையும் தானம் செய்திருந்ததால் சென்னையில் உள்ள சங்கரா நேத்ராலயா மருத்துவமனைக்கு  கண்கள் தானமாக வழங்கப்பட்டது. தற்போது பாலாஜி நாராயணன் கருவிழிகள் இரண்டு பேருக்கும், வெள்ளை கண் இரண்டு பேருக்கும் என நான்கு பேருக்கு பொருத்தப்பட்டு நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. டாக்டராகி சிறு வயதிலேயே மரணத்தை சந்தித்த பொள்ளாச்சி மருத்துவர் பாலாஜி நாராயணன் இறந்தும் நான்கு பேருக்கு கண்பார்வை கொடுத்து ஒளி கொடுத்து தெய்வமாக நிலைத்து நிற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!