Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிணவறையில் சடலத்தை கடித்துக் குதறிய நாய் – 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

தெலுங்கானா மாநிலம் ஜட்சர்லா அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, உள்ளே புகுந்த நாய் ஒன்று கடித்துக் குதறியதோடு, உடல் பாகங்களைக் கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் ஓடியது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாநில சுகாதாரத்துறை, பணியில் அலட்சியமாக இருந்த 4 மருத்துவமனை ஊழியர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!