Skip to content

அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்! மனைவியுடன் செம குத்தாட்டம்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் இந்த விழாவில் முன் வரிசையில் கலந்து கொண்டார்.

தேர்தலில் வெற்றிபெற்றபோதே டொனால்ட் டிரம்ப் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதே மகிழ்ச்சியில் தான் இப்போது பதவியேற்க வந்தபோதும் அவருடைய முகத்தில் தெரிந்தது. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக விழாவிற்கு வந்த அவர் மேடையில் சந்தோசமாக நடனமாட்டிக்கொண்டு கேக்கை வெட்டினார்.

error: Content is protected !!