கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன்கள் கனகராஜ் மற்றும் வினோத்குமார்.அதில் கனகராஜ் மாற்று சமூகத்தை சேர்ந்த தர்ஷினி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது தம்பி கனகராஜை நண்பருடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்துள்ளார்.அப்போது தடுக்க வந்த மனைவி தர்ஷினி பிரியாவுக்கு அருவாள் விட்டு விழுந்து அவரும் உயிரிழந்து விட்டார். இவ்வழக்கு விசாரணை கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 23-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி தூக்கு தண்டனை வரை தரலாம் அந்த அளவுக்கு குற்றம் இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இன்றைய தினம் குற்றவாளியான கனகராஜின் அண்ணன் வினோத்குமாருக்கு கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இரட்டை ஆணவ கொலை வழக்கு.. அண்ணனுக்கு தூக்கு தண்டனை
- by Authour

Tags:Coimbatore MettupalayamDeath sentenceDouble murder caseஅண்ணனுக்கு தூக்கு தண்டனைஇரட்டைக்கொலைகோவை மேட்டுப்பாளயைம்