கேரளாவின் கோழிக்கோடு வடகராவில் MDMA போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காவ்யா மற்றும் நீஷ்மா ஆகிய பெண் ஆசிரியைகளை 2 நாட்கள் போலீஸ் காவல் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தற்செயலாக சிக்கிக்கொண்டதாகவும் காவ்யா ஊடகங்களிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொறு ஆசிரியை கீர்த்தனா ஏற்கனவே கைதானார்.
போதைப்பொருள் வழக்கு: 2 ஆசிரியைகளுக்கு போலீஸ் காவல்
