Skip to content
Home » ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

  • by Senthil

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக 161 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து ஜப்பான் மக்கள் மீளாத நிலையில்  இன்று மீண்டும் மேற்கு கடற்கரை நகரமான ஹோன்ஸூவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6ஆக பதிவானது.  இந்த நிலநடுக்கத்தின் சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!