Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு உள்பட பல இடங்களில் ED ரெய்டு

டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விசாகன். இவரது வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது.  இவரது வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.   தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளது என கூறி வரும் அமலாக்கத்துறை  இது தொடர்பாக  ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கிறதா என  தேடி இந்த  சோதனையை நடத்துவதாக  தெரிகிறது.  விசாகன் வீட்டு முன் மத்திய போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இது தவிர சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே.மதுபான நிறுவன  அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த, இவரது இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை ஆகாஷ் தயாரித்து வருகிறார்.

error: Content is protected !!