திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் கூறியதாவது: அதிமுகவின் தோள் மீது ஏறி கொண்டு தமிழகத்தில் நுழைவதற்கு பாஜ முயற்சிக்கிறது. அதிமுகவுக்கு வாக்களிப்பது, பாஜவுக்கு ஓட்டு போடுவதற்கு சமமாகும். பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. எனவே தற்போதைய நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையின்படி 33 சதவீதம் வழங்கலாம்.
ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டு 33 சதவீதம் என்பது ஏமாற்று வேலை. எடப்பாடி பழனிசாமி தெரிந்தோ அல்லது தெரியாமலோ சிக்கக்கூடாத இடத்தில் சிக்கி விட்டார். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்து விட்டார். திமுக அரசின் திட்டங்களால் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு வரவேற்பு அலை வீசுகிறது. இவ்வாறு கூறினார்.
