Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் கடும் தாக்கு!

தென்காசி : மாவட்டத்தில்  நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மீது மறைமுகமாக கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். “ஊர்ந்து போய் பதவியைப் பெற்று, அதை கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இன்று அரசியலில் இருப்பவர்தான் அவர்” என்று ஓபிஎஸ் குறிப்பிட்டார். அந்த நபரின் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஓபிஎஸ் தொடர்ந்து, “அவரது தலைமையில் சந்தித்த 10 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. நன்றி மறந்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே வாக்களிக்க மாட்டார்கள்” என்று வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தவறான பிரசாரம் செய்வதாகவும், கத்தி கத்தி பேசினால் மக்கள் கேட்பார்கள் என்று நினைப்பதாகவும் விமர்சித்தார்.“அவர் பதவி பெற்றவருக்கு நன்றி சொல்லாமல் துரோகம் செய்தவர்.

பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்பாளர் என்று தனக்குத்தானே பதவி சூட்டிக்கொண்டவர்” என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். அத்துடன், “அம்மாவின் பெயரை தவறாக பயன்படுத்தி, தன்னை முதலமைச்சராக அறிவிக்கச் செய்தார். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றும் தெரிவித்தார்.ஓபிஎஸ் மேலும் கூறியதாவது, “அவர் பொதுச் செயலாளராக வந்ததிலிருந்து நாடாளுமன்றம், சட்டமன்றம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் தோல்வியே சந்தித்துள்ளார். நன்றி மறந்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த தேர்தலிலும் அது தெளிவாகத் தெரியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் , இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-இன் பேச்சு திமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எடப்பாடி பழனிசாமி மீதான இந்த மறைமுக தாக்குதல் அதிமுக உள்ளேயும் வெளியேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் அதிமுக-வுக்குள் நீடித்து வரும் பிளவு மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

error: Content is protected !!