திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 6-ந் தேதி சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடைபெறுகிறது. வரும் மார்ச் 6ம் தேதி காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சனி பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு மேஷம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு 6-ந் தேதி காலை 7:00 மணி முதல் 8 மணி வரை கணபதி ஹோமம், சனி பரிகார ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணா ஹூதி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து 8.24 மணிக்கு நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இந்த பரிகார ஹோம விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வினோத்குமார், செயல் அலுவலர் சரண்யா, அர்ச்சகர் கோகுல் ஆகியோர் முன்னின்று செய்துள்ளனர்.
