Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

திருச்சி துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (74). இவர் தனது சைக்கிளில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.பி.டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெயக்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

இதேபோன்று, லால்குடி அருகே உள்ள கண்ணக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமேரி (81). இவர் காலை கண்ணக்குடி – விடுதலைபுரம் சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயமேரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து அவரது பேரன் ரூபன் பிரிட்டோ கே.கே.நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவரை
கைது செய்தனர்.

2 முதியவர்கள் திடீர் தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சீதேவிமங்கலத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (67). இவர் கடந்த சில மாதங்களாக மனநல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கிக் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ராணி சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மணப்பாறை அடுத்த வையம்பட்டி, வாகப் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் மதுவுக்கு அடிமையானார். இதனால் அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி விஜயலட்சுமி, கணவரின் சிகிச்சை செலவுக்கு பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றிருந்தார்.
மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில், ராஜேந்திரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய விஜயலட்சுமி, கணவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி வையம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!