Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே செயின் திருடிய பலே கில்லாடி மூதாட்டி கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மெயின் ரோட்டில் தவமணி 75 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் காலியாக உள்ள வீடுகளுக்கு வாடகைக்கு குடி வந்து விட்டார்களா என முஸ்லிம் லேடி போல் முக்காடு போட்டுக்கொண்டு நேற்று காலை விசாரிக்க வந்தார் பின்னர் வெளியே சென்று மீண்டும் திரும்பி வீட்டுக்குள் வந்து கத்தியை காட்டி மிளகாய் பொடி தூவி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது பற்றிய புகாரின் பேரில் திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் உடனடியாக வந்து ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் மூலம் மூதாட்டி இடம் செயினை பறித்துச் சென்ற பெண்ணின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். மூதாட்டியின் வீடு அருகிலேயே மரப்பட்டறை சந்தில் வசித்து வரும் 62 வயது சாந்தி என்ற மூதாட்டி செயினை பறித்து சென்றது தெரியவந்தது போலீசார் சாந்தியை கைது செய்து அவரிடமிருந்து நான்கு பவுன் செயினை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில் செயின் திருடிய பெண்ணை கண்டுபிடித்து செயினை பறிமுதல் செய்த திருநீலக்குடி காவல்துறையின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள்.

error: Content is protected !!