இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் பா.ஜ.க. முன்னணியில் இருந்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை பெற்றது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 35 தொகுதிகளை பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் காங்கிரஸ் 38 தொகுதிகளிலும், பா.ஜ.க.29 தொகுதிகளிலும் முன்னணியில் இருக்கிறது.
குஜராத்தில் பா.ஜ.க. முன்னணியில் உள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பா.ஜ. தனியாக 134 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 7 தொகுதிகளிலும் சுயேச்சைகள் 5 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளனர். குஜராத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது.