Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தி கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு, பணி விடுதலை வழங்க வலியுறுத்தி கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர்–கோவை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2025 அக்டோபரில் நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக, 14.03.2026 அன்று

நிர்வாகத்துடன் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தப்படி கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர் (Class IV) பதவிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாகவும், அதற்கான கோப்பு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும்,

மேலும், 17.06.2026 அன்று மின்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் பணி உயர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்,

14.03.2026 முத்தரப்பு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தி கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும், விருப்ப ஊர் மாறுதல் பெற்ற அனைவரையும் பாரபட்சமின்றி பணி விடுதலை செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வை வழங்க வேண்டும், மேலும் அவர்களை சட்டவிரோதமாக பிற பணிகளில் ஈடுபடுத்துவதையும், அடிமைகளைப் போல நடத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!