Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

சேலை வாங்கி தராத ஆத்திரம்-கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

மும்பையை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவர் கணவர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறினார்.

டாக்டர்கள் நடத்திய சோதனையில் ஹரிராம் சிங் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. சுனிதா தேவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரது 7 வயது மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுனிதா தேவி கணவரை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதே போல பிரதே பரிசோதனை அறிக்கையிலும் ஹரிராம் சிங் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் சுனிதா தேவியை கைது செய்து விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று சேலை வாங்கி தருமாறு கணவரை சுனிதா தேவி கேட்டுள்ளார். இதற்கு கணவர் மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட் டது. இதில் ஆத்திரமடைந்த சுனிதா தேவி, கணவரை குக்கர் மூடியால் தலையில் ஓங்கி தாக்கி உள்ளார். மேலும் கழுத்தை நெரித்துள்ளார். இதில் ஹரிராம் சிங் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

error: Content is protected !!