மதிமுக கழக பொதுச் செயலாளர் வைகோ விமானம் மூலமாக கோவை வருகை, விமான நிலையத்தில் மதிமுக கட்சி நிர்வாகிகள் சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்..
கோவை சிவானந்த காலனி,அருகே உள்ள பவர் ஹவுஸ் பகுதியில், இன்று, இன்ஸ்டூட் ஆஃப் தேன்சிட்டு அமைப்பினர், மத்திய அரசு EPR சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தை அறிவித்துள்ளனர் இந்த நிகழ்ச்சியை, துவக்கி வைக்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார் . அவருக்கு கோவை விமான நிலையத்தில் மதிமுக நிர்வாகிகள், சால்வைகள் அணிவித்து மரியாதை செலுத்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளிடேயும் கலந்துரையாடினார் பின்னர் அனைவரையும் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து விடுங்கள் என்று கூறி, காரல் விடைபெற்று சென்றார். இந்த நிகழ்வில், இரு நிகழ்வில், மாநில மாவட்ட பகுதி கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இளைஞரணி மாணவரணி பொறியாளர் அணி மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
