தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து திருச்சிபாராளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக 1280 வாக்குப்பதிவு அலகு அனுப்பி வைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிபிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரால் திறக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு 1280 வாக்குப்பதிவு அலகு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தகவலை தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.