Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் 43 வயது பெண் ஒரு புகார் அளித்தார். அதில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து மகளுடன் வாழ்கிறேன். நான் சினிமாவில் மேக்கப்(ஒப்பனை) கலைஞராக இருந்து வருகிறேன். கடந்த 2021-ம் ஆண்டு சந்திரேகவுடா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர், ராமநகரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாக கூறினார்.
அதன்பிறகு, எனது வீட்டுக்கு அடிக்கடி அவர் வந்து சென்றார். நாங்கள் 2 பேரும் நெருங்கி பழகினோம். என்னுடன் உல்லாசமும் அனுபவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தெரியாமல் சந்திரேகவுடா வீடியோ எடுத்து வைத்து கொண்டார். அதன்பிறகு, என்னை திருமணம் செய்வதாகவும் கூறினார். ஆனால் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக கூறி, என்னை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்துக் கொண்டார்.

அந்த வீடியோவை வெளியிடுவதாக தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார். அவரது செல்போனில் பல பெண்களுடன் ஆபாசமாக வீடியோ அழைப்பில் பேசும் வீடியோக்கள் இருந்தது. இதனால் சுதாரித்து கொண்டு புகார் அளிக்கிறேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சந்திரேகவுடாவை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் ராமநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருந்தது தெரிந்தது. இதுதவிர தன்னை போலீஸ் அதிகாரி எனவும், பத்திரிகையாளர் எனவும் கூறி சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் சென்று வந்தது தெரிந்தது. இதற்காக போலி அடையாள அட்டைகளை தயாரித்து சந்திரேகவுடா பயன்படுத்தி வந்தார். மேலும் சிலரிடம் தன்னை நீதிபதி எனவும் சந்திரேகவுடா கூறி வந்துள்ளார்.
மேலும் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததுடன், அவர்களிடமும் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி சந்திரேகவுடா பணம் பறித்ததாக கூறப்படுகிறது. அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள், சில பெண்களின் ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சந்திரேகவுடாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பெண்களிடம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவதில் கில்லாடியாம் இதனால் அவர் வீசிய வலையில் பல பெண்கள் சிக்கியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

error: Content is protected !!