Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடந்தை, கரூரில் இருந்து நேபாளம் சென்ற 40 பேரின் குடும்பத்தினர் கண்ணீர்

குடந்தை, கரூரில் இருந்து நேபாளம் சென்ற 40 பேரின் குடும்பத்தினர் கண்ணீர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்படும் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் நேபாளத்துக்கு 57 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் நேபாளம் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 3 பஸ்களில் சென்ற 57 பேர் சிக்கினர். இதில் ஒரு பஸ்சின் டிரைவர் சாமர்த்தியத்தால் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதைதொடர்ந்து 2 பஸ்களுடன் மாயமான மயிலாடுதுறை ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம்(63), மூர்த்தி(65), பத்மினி(61), கடலூர் மாவட்டம் புவனகிரி திரிபுரசுந்தரி(67), பள்ளிப்படை முருகானந்தம்(69), தர்மபுரி புஷ்பா(54), கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த பிரேமாவாணி(45), புஷ்பராணி(59), நெல்லூர் திம்மராயசாமி(46), மம்தா(39), மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காணிமுட்டம் புஷ்பலதா(60), நல்லூர் ராஜேஷ்வரி(57), கூறைநாடு வெங்கட்ராமன்(50), நாமக்கல் வசந்தபுரம் கிருஷ்ணவேணி(65), புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் ஆனந்தசுந்தரி(58), பெட்டியார்பாளையம் வைஷ்ணவி(50), கீதா(68), தஞ்சை மாவட்டம் களிமேடு அன்பழகி(67), ராஜப்பன் நகர் சித்ரா(61), வ.உ.சி நகர் சிவயோகம்(65), பூக்காரலாயம் இளவரசி(70), கிருஷ்ணாபுரம் தங்கமதி(49), கும்பகோணம் சத்யம் நகர் ராம்குமார்(60), இவரது மனைவி கீதா(56), சுவாமிமலை வடக்குவீதி ராஜ்குமார்(62), இவரது மனைவி ஜெயந்தி(54), செட்டிமண்டபம் ரமேஷ்(68), புதுமணி வடக்கு தெரு திருமலைராஜன்(54), இவரது மனைவி தையல்நாயகி(54), கர்ணகொல்லை அக்ரஹாரம் சாய்நாத்(70), இவரது மனைவி ஜெயலட்சுமி(64), இவர்களது மகள் கேதாரகவுரி(32), காளிமுத்து நகர் சையது உமர் பாரூக்(29), திருவண்ணாமலை கண்ணம்மாள்(67), திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கலைச்செல்வி(66), மன்னார்குடி வடுவூர் பாலசுப்பிரமணியன்(58) ஆகிய 36 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுவரை மீட்கப்பட்ட கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த தியாகராஜன்(49), கிருபாகரி(49), பழனியப்பன்(69), கலைமதி(67), முத்துக்குமரேசன்(56), மைதிலி(49), நெய்வேலி டவுன்ஷிப் திருமாவளவன்(62), சென்னை மணப்பாக்கம் சத்யா(58), வேளச்சேரி நாவுகபீர்தாஸ்(55), வேளச்சேரி விஜய புவனேஸ்வரி(55), பெசன்ட் நகர் சாந்தி(47), மாறன்(57), கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கனகசபை(68), ராதை(64), கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த ரகுநாதன்(56), மயிலாடுதுறையை சேர்ந்த மணிமேகலை(65), ரத்னகுமார்(65), பூங்குழலி(62), திருச்சியை சேர்ந்த வள்ளிநாயகி(62), சிவரஞ்சனி(46), கற்பகம்(62) ஆகிய 21 பேரை பாதுகாப்புடன் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்து வரவுள்ளனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சையது சாதிக் கூறுகையில், ‘‘மாயமான 36 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்களது அலுவலகத்துக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். சிலர் போனில் தொடர்பு கொள்கின்றனர்’’ என்றார். ஆன்மிக பயணம் மேற்கொண்ட சுவாமிமலையை சேர்ந்த ராஜ்குமார், ஜெயந்தி தம்பதியரின் மகன்கள் மணிகண்டன், கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது: எங்கள் பெற்றோர் ராஜ்குமார், ஜெயந்தி ஆகியோர் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கடந்த 23ம் தேதி கும்பகோணத்தில் இருந்து ஆதி கைலாசுக்கு சென்றனர். 23, 24, 25ம் தேதிகளில் எங்களிடம் பேசினார்கள். 26ம் தேதி காலையில் அவர்கள் சென்ற இடத்தில் வெள்ளப்பெருக்கு என கேள்விப்பட்டோம். அதை பார்த்ததில் இருந்து எங்களது குடும்பமே மன உளைச்சலில் உள்ளது. இதுவரை 21 பேரை மீட்டுள்ளனர். அவர்களை போன்று எங்களது பெற்றோர் மற்றும் மாயமானவர்களை மீட்டு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கரூரில் இருந்து ஆன்மீக சுற்றுலாவுக்கு ஒரே குழுவாக நேபாளத்துக்கு சென்ற கரூர் வடக்கு காந்தி கிராமம் ஹவுசிங் போர்டை சேர்ந்த அன்பரசு, கரூர் கேவிபி நகர் பெரியார் நகரை சேர்ந்த தனலட்சுமி(60), கரூர் காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கற்பகம்(55), கரூர் அருணாசலம் 3வது தெருவை சேர்ந்த தமிழரசி அசோகன் ஆகிய 4 பேரும் மாயமாகியுள்ளனர். இவர்களின் செல்போன் எண்ணை உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கற்பகத்தின் கணவர் பெரியசாமி கூறுகையில், எனது மனைவி கற்பகம் கடந்த 14ம் தேதி கயிலாய யாத்திரைக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை அவரை தொடர்பு கொண்டு பேசியபோது நாங்கள் தற்போது சீன நாட்டின் எல்லையில் இமிகிரேஷன் பணிகளுக்காக காத்திருக்கிறோம் என்றனர். அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவரை தேடுவதற்காக எங்களது குடும்பத்தினர் சிலரை அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.

நேபாளத்துக்கு சென்ற கரூர் வடக்கு காந்தி கிராமம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அன்பரசு புலியூர் காளிபாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவரது மகள் கூறுகையில், நான் எனது தந்தையிடம் தினமும் காலையில் எங்கு இருக்கிறார் என்று லொகேஷன் பகிருமாறு கூறுவேன். அதன்படி நேற்று முன்தினம் காலை அவரை தொடர்பு கொண்டு பேசியபோது சீன நாட்டின் எல்லை பகுதியில் காத்திருப்பதாக கூறினார். அதன்பிறகு எனது தந்ைதயை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தினர் பதற்றத்துடன் இருந்து வருகிறோம் என்றார்.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற ஆரணியை சேர்ந்தவர் மாயம்; சென்னையில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற ஆரணி மூதாட்டி மாயமானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் நிர்மலா(70). இவருக்கு 2 மகன், ஒரு மகள். இவர்களது மகன்கள், மகளுக்கு திருமணமாகி சென்னையில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிர்மலா சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து 49 பேருடன் ஆன்மிக சுற்றுலாவாக நேபாளத்தில் உள்ள திருக்கயிலாயம் சென்றார். நேற்றுமுன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் பலர் சிக்கி உள்ளனர். சுற்றுலா சென்ற நிர்மலாவும் இதுவரை வீடு திரும்பவில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்என்ன ஆனார் என தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

இதையறிந்த ஆரணி தாசில்தார் அகத்தீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரை சேர்ந்த 9 பக்தர்களை பத்திரமாக அழைத்து வர வேண்டும், குடும்பத்தினர் கண்ணீர்மல்க கோரிக்கை: கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் கடந்த 23ம்தேதி இரவு கைலாஷ் யாத்திரைக்கு புறப்பட்டனர். இவர்கள் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கினர். இதில், ஒரு வாகனத்தில் பயணம் செய்த 20 பேர் பாதுகாப்பாக தப்பினர். மற்ற 2 வாகனங்களில் சென்ற 37 பேர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதாக தகவல் வெளியானது. இதில் நெய்வேலியைச் சேர்ந்த திருமாவளவன் (62) நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதையடுத்து, 57 பேரில் மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். மற்ற 36 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி, கடலூர் மாவட்டத்திலிருந்து யாத்திரை சென்றவர்களில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் தியாகராஜன் (49), கிருபாகிரி (49), பழனியப்பன் (69), கலைமதி (67), முத்துக் குமரேசன் (56), விஜய புவனேஸ்வரி (55), சாந்தி (47), மாறன் (57), நெய்வேலி திருமாவளவன் (62) உள்ளிட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இத்தகவல் உறுதிபடுத்தப்பட்டு நிலையில் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் நிம்மதியடைந்து உள்ளனர். அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு உடனடியாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென கண்ணீர்மல்க வலியுறுத்தி உள்ளனர். அதேவேளையில் இவர்களுடன் சென்ற புவனகிரியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மனைவி திரிபுரசுந்தரியின் (67) இருப்பிடம் இதுவரை தெரியவில்லை. அவரது கணவர் மகாலிங்கம் குடும்பத்தினர் கண்ணீருடன் தவித்து வருகின்றனர். இதுதவிர சென்னை மைதிலி (49), காஞ்சிபுரம் சத்யா (58), பெங்களூரு கனகசபை (68), ராதா (64), ஓசூர் ரகுநாதன் (56), மயிலாடுதுறை ரத்தினகுமார் (65), பூங்குழலி (62), மணிமேகலை (65), திருச்சி சிவரஞ்சனி (46), கற்பகம் (62), வள்ளிநாயகி (62), சென்னை நாவு கர்தாஸ் (55) உள்ளிட்டோரும் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ஜெர்மனியிலிருந்து வந்த மகன் நேபாள வெள்ளத்தில் மாயம்; கடலூர் பெற்றோர் கண்ணீர் கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேசன். கடலூர் மாவட்ட தொழில் மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் ஹரிஹரசுதன் (28) ஜெர்மனியில் பணிபுரிகிறார். கடந்த 10ம்தேதி இவர் சென்னையில் இருந்து கடலூர் கூத்தப்பாக்கத்திற்கு வந்து பெற்றோருடன் 3 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் 13ம்தேதி சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி மறுநாள் 14ம்தேதி டெல்லிக்குச் சென்ற அவர், ஈஷா யோகா மையம் மூலமாக அங்கிருந்து விமானத்தில் காத்மாண்டு புறப்பட்டு சென்றார். தற்போது வரையிலும் ஹரிஹரசுதனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேபாளம் வெள்ளப்பெருக்கில் ஹரிஹரசுதனும் சிக்கி மாயமாகி இருக்கலாம் என்ற அச்சம் அவரது பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகனை மீட்டுத் தரக்கோரி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரலாற்றுப் புத்தகங்களை ஆராய்தல்

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான கிருஷ்ணகிரி, நாமக்கல்லை சேர்ந்த 9 பேரின் நிலை என்ன?… 3வது நாளாக குடும்பத்தினர் சோகம்; கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே அளேகுந்தாணி கிராமத்தை சேர்ந்த திம்மராயசாமி(46), அவரது மனைவி மம்தா (40), ஓசூர் அண்ணா நகரை சேர்ந்த ரகுநாதன்(56), ஓசூர் பகுதியை சேர்ந்த புஷ்பராணி(59) ஆகியோர் நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகினர். இவர்களில் ரகுநாதன் மட்டும் தான் பத்திரமாக உள்ளதாக குடும்பத்தினரிடம் போனில் பேசியுள்ளார். மற்றவர்கள் பற்றி 3நாட்களாகியும் எந்த தகவரும் கிடைக்கவில்லை. இதேபோல், நாமக்கல் அடுத்த சின்னவேப்பநத்தம் தில்லை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(63), ராசிபுரம் எடுத்த வெண்ணந்தூர் அத்தனூர் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பியும் கொமதேகவை சேர்ந்த சின்ராஜ், என்பவரின் சகோதரர் பழனிவேல்(62), அவரது மனைவி அருள்மணி(57), சின்ராஜின் சம்பந்தி கற்பகம், அதே ஊரை சேர்ந்த அசோகன்(57), மாராயி ஆகியோரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளனர். இவர்களை பற்றிய தகவல் இன்று வரை தெரியவில்லை. இதனால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

error: Content is protected !!