தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கன்னித்தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் பெண் பிணம் தொங்குவதாக பொதுமக்கள் தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை கன்னிதோப்பை சேர்ந்த பழனிவேல் மனைவி அஞ்சம்மாள் (68) என்று தெரியவந்தது. மேலும் அவர் தனது இரண்டாவது மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வீட்டை விட்டு சென்றுள்ளார். அவர் இ.பி. காலனியின் உள்ள மகள் வீட்டு சென்றிருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்து இருந்தனர். ஆனால் மனமுடைந்த அஞ்சம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.