Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது விவகாரம்..திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதைக் கைவிட வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ம.ப.சின்னதுரை தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, விவசாயிகள் பெற்ற ஒட்டுமொத்தக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலை 67 சுற்றுச்சாலைக்காக 10 ஏரிகளில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சாலைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், ஆற்றுப்படுகைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர் செழியன், காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த கவித்துவன், கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் ம.ப. சின்னதுரை:–

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை ரத்து செய்யவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள சாலைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.

error: Content is protected !!