Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் விளைவிக்கும் நெல் தமிழக அரசின் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோன்று மத்திய அரசின் நேஷனல் கன்ஸ்யூமர் கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரேஷன் சார்பில் டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது . ரூபாய் 500 கோடிக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு பணம் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக சமீபத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அப்போது மத்திய அரசிடம் இருந்து 15 நாட்களில் அந்த தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு பணம் வந்து சேரவில்லை இந்த நிலையில் டெல்லியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள்
ரயில் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் அதைத்தொடர்ந்து ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!