Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக அரசின் தீர்மானத்திற்கு… விவசாயிகள் வரவேற்பு.. முதல்வருக்கு நன்றி

மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசின் சட்டப்பேரவை தீர்மானத்திற்கு விவசாயிகள் வரவேற்பு – முதல்வருக்கு நன்றி!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை

கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:–

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துவிட்டது. அரசு அறிவித்துள்ள ரூ. 134 கோடி மதிப்பிலான தொகுப்பு நிதி, சாகுபடி செய்ய முடியாத சூழலில் உள்ள விவசாயிகளுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. இது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தருகிறது.

தமிழக முதல்வர் இருமுறை டெல்லி பயணம் மேற்கொண்டிருந்தாலும், பிரதமர் மோடியையோ அல்லது காங்கிரஸ் தலைவர்களையோ சந்தித்து தமிழகத்திற்கான தண்ணீரைப் பெற்றுத் தரவில்லை என்பது விவசாயிகளின் குமுறலாக உள்ளது. குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 4,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக, தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மனதார வரவேற்கிறோம். முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் வருகிற சம்பா சாகுபடிக்கு, காவிரி நீர் பங்கீடு முறைப்படி மாதந்தோறும் 177.25 டிஎம்சி தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்காகத் தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!