நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஊழியரின் கணவர்
திருச்சி மாவட்டம் லால்குடி பள்ளிவிடை வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (35 ). இவரது மனைவி ஹேமா. இவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.
சமீப காலமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில் ராஜா நேற்று திடீரென டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்தார் பின்னர் மனைவியிடம் அவர் சண்டை போட்டார் .இதனைப் பார்த்துக் கொண்டிருந்த உதவி பொறியாளர் சமயசக்தி ( 44 ) என்பவர் ராஜாவை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா கூர்மையான ஆயுதம் மூலமாக அவரை தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் அவரது முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது . சக ஊழியர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . பின்னர் சமயசக்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு போதை மாத்திரை விற்பனை செய்த பாலக்கரை ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்த திலீப் (22). என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. இதேபோன்று தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாங்குளம் ரயில்வே ட்ராக் பகுதியில் கோதை மாத்திரை விற்பனை செய்த திருச்சி ஜீவா நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கிற கோளாறு கார்த்தி ( 25 ) என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 5 போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது கைதான கார்த்திகேயன் அரியமங்கலம் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலில் ரவுடி பட்டியலில் உள்ளார்.
சிறுவனை டூவீலரை ஓட்ட அனுமதித்த தந்தை கைது
திருச்சி காந்தி மார்க்கெட் ஆர்ச் பகுதியில் திருச்சி மாநகர போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது
17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார் .அவருக்கு லைசென்ஸ் இல்லை.
அதைத் தொடர்ந்து போலீசார் திருச்சி தனரத்தினம் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த அந்த சிறுவனின் தந்தையான முகமது நிஜாமுதீன் ( 45 ) என்பவரை லைசன்ஸ் இல்லாமல் 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பாக சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .
போலி பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மங்கலக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாரி (40). இவர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரி முகேஷ் ராம் சோதனைக்கு உட்படுத்தினார் அப்போது போலி பாஸ்போர்ட் மூலமாக அவர் மலேசியா செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து முகேஷ ராம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்துல் பாரியை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.

