தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பலர் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.