Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.

இந்த குப்பை கிடங்கில் திடீரென நேற்று மாலை  தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்

குப்பைகளில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் 5-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் கரூர்-வாங்கல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், அந்தசாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்தை திருப்பி விட்டனர்.  தொடர்ந்து போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!