Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை-சோகம்

– குடும்பப் பிரச்சினையா? போலீசார் தீவிர விசாரணை.

கரூர் மாவட்டம் சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (63), அவரது மனைவி ஜானகி (60) ஆகியோரின் மகள் சுகுணா (35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணமாகி, சிவானி (10), ஆதிரன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சுகுணா மற்றும் அவரது கணவர் பிரபு இடையே குடும்பப் பிரச்சினை இருந்து

வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சின்ன காளிபாளையம் பகுதியில் ராமசாமிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டிற்கு, ராமசாமி, ஜானகி, சுகுணா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஐந்து பேரும் நேற்று இரவு கால் டாக்ஸி புக் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் 5 பேரும் உடலில் கயிறுகளை கட்டிக்கொண்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை அந்த வழியாக சென்ற பக்கத்தில் உள்ள தோட்ட உரிமையாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஐந்து பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஐந்து பேரும் உயிரிழந்ததற்கான காரணம் குடும்பப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த இச்சம்பவம் கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிணறு அருகே செல்போன் கட்டப்பை உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!
Secret Link