திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (ஆக.17) நள்ளிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு பெண் பயணியின் உடைமையை சோதனை செய்தபோது, அதில் ரூ.90.04 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்களை உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து எடுத்துச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பயனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
