Skip to content
Home » தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

  • by Senthil

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 663 நாட்களுக்கு  பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது .

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை சுமார் 40% குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை  குறைக்கப்படவில்லை. கடந்த 2022 மே மாதம் முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102- ஐ ஒட்டியும் டீசல் ரூ.94-ஐ ஒட்டியுமே நிலவி வந்தது.

ஆனால் தேர்தல் வந்ததும் சமையல் வாயு விலை குறைக்கப்பட்டது. இப்போது பெட்ரோல், டீசல் விலையையும் மத்திய அரசு குறைத்து உள்ளது. 663 நாட்களுக்கு  பிறகு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய்  குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  இன்று அதிகாலை முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது. வி்லை குறைக்கப்பட்டதை தொடர்ந்து
 ரூ.100-க்கு விற்கப்படும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!