Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருள்கள்-பணம் கொள்ளை

கரூரில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் ரொக்க பணம் கொள்ளை– மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு,
கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னையில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இதற்காக அடிக்கடி சென்னை சென்று வருவது

வழக்கம். இந்நிலையில், இன்று காலை சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான கரூர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும், பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம், 4 பவுன் தங்க நகைகள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் அரை கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பைனான்சியர் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து மர்ம நபர்கள் நடத்திய இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link