Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை- குஜராத் மோதல்…. சிறந்த இறுதிப்போட்டி….சுந்தர்பிச்சை வாழ்த்து

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்! குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!