நீலகிரி மாவட்டம் , பர்லியார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சிக்கியது. தொடக்கத்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 6 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்துக்குள் மேலும் 6 பேர் சிக்கியிருப்பதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து – 6 பேர் சிக்கியதாகத் தகவல்!
