Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலையை தணிக்கை செய்ய அரசுக்கு உரிமை இருக்கக்கூடாது: கமல் கருத்து

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன், இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின், censor என்ற சொல்லை நீக்கச்சொல்லி, இந்தியாவின் ஒன்றிய (மத்திய) திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification. சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை

தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி ஒன்றிய (மத்திய) அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக்கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான். இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!