Skip to content
Home » கவர்னர் மாளிகையில் தூங்கும் மசோதா….. நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு…..முதல்வர் அறிவிப்பு

கவர்னர் மாளிகையில் தூங்கும் மசோதா….. நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு…..முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் அளித்த பேட்டி:

பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து வருகிறோம்.தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததற்கு ஆளுநர் தான் காரணம்.

இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கவே பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வருவாரா என்ற கேள்விக்கு, ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வரப்போகிறது என கூறிக்கொண்டுள்ளார்கள் என்றார்.

நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பரப்பப்படுகிறது.
வீட்டு இணைப்புக்கு எந்த வித கட்டன உயர்வும் கிடையாது.
அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். ஒன்றிய அரசின் மின் கட்டண விதிப்படி 4.7 விழுக்காடு கட்டணத்தை உயரத்த வேண்டும் ஆனால் 2.18 விழுக்காடாக அதை தமிழ்நாடு அரசு குறைத்து அந்த தொகையையும் மானியமாக தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும்.

அ.தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம் செங்குத்தாக உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்து விட்டார்கள். அ.தி.மு.க ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான் இந்த பிரச்சனை.

ஆவினில் சிறுவர்களை வேலைக்கு பயன்படுத்துவதாக கூறும் குற்றச்சாட்டு தவறான குற்றச்சாட்டு அது குறித்து தயாரிக்கப்பட்ட ஆதாரம் பொய்யானவை பொய்யாக தயாரிக்கப்பட்டு அது பரப்பப்படுகிறது.

ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி அரச மருத்துவ கல்லூகளில் கேமரா இல்லை என மூன்று மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தார்கள். உரிய அதிகாரிகளிடம் அதை  விளக்கி கூறி  விளக்கம் அளித்த பின்பு தற்பொழுது மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!