Skip to content
Home » கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது…. முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது…. முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பசும்பொன்னில் தேவர் நிைனவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி. தேவர் நூற்றாண்டு நூலகம், தேவர் புகைப்பட கண்காட்சி அரங்கம் போன்றவற்றை அமைத்தவர் கருணாநிதி. மதுரை மேம்பாலத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டியவர் கருணாநிதி. கமுதி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவர் பெயரில் கல்லூரி அமைய காரணம் கருணாநிதி. பசும்பொன்னில் பொதுமக்கள் எளிதாக அஞ்சலி செலுத்த இரண்டு மண்டபங்கள்  கட்டப்படும்.

பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் ரூ.2.05 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.   இலங்கை அரசு அத்துமீறி தமிழக மீனவர்கள் கைது செய்வது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மீனவர்களை மீட்க திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்கள் பிரச்சனைகளை பேச மீனவ பிரதிநிதிகளோடு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வை டில்லிக்கு அனுப்பிவைத்துள்ளேன். கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. கவர்னர் பாரதிய ஜனதா கட்சியாக மாறிவிட்டார், ஆளுநர் மாளிகையும் பாரதிய ஜனதா அலுவலகமாக மாறிவிட்டது. இதுதான் வெட்கக்கேடு. இவ்வாறு மு.க.ஸ்டாலின்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!