Skip to content
Home » நீண்ட நேரமாக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள்….. அரசு ஆஸ்பத்திரியின் அவலநிலை….

நீண்ட நேரமாக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள்….. அரசு ஆஸ்பத்திரியின் அவலநிலை….

பெரம்பலூர் தலைமை ஆஸ்பத்திரியில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் கார்டியோ டெஸ்ட் தைராய்டு டெஸ்ட் எடுப்பதற்கு தனியார் மருத்துவமனை தான் செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த பரிசோதனை செய்யும் அலுவலர்கள் தாமதமாக வருவதால் கர்ப்பிணி பெண்கள் தரையில் அமர்ந்து நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது . அரசு மருத்துவமனையில் பணி செய்யும் பணியாளர்களும் மருத்துவர்களும் வரும் நோயாளிகளிடமும் கர்ப்பிணி பெண்களுக்கு இடமும் தகாத வார்த்தைகளால் திட்டுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய வருகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர் . தலைமை மருத்துவமனை என்று பெயர் மட்டும் தான் உள்ளது இந்த மருத்துவமனையில் குடிநீர் வசதிகள் பாத்ரூம் வசதிகள் உட்பட போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் வேண்டுகோள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!