அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார். அரையிறுதியின் 2-வது கிளாசிக்கல் ஆட்டத்தில் கீமரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, 6 புள்ளிகள் முன்னிலை பெற்றார். தொடர்ந்து விரைவு ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் பிரக்ஞானந்தா 19-9 என்ற புள்ளிக்கணக்கில் கீமரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
