Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிராம்பட்டினம் வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!- பக்தர்கள் தரிசனம்

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் 20 அடி உயரமுள்ள வெக்காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வெக்காளியம்மன் சுமார் 20 அடி

உயரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த
20 அடி உயரமுள்ள வெக்காளியம்மனுக்கு இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம், மேளம், தப்பாட்டம் முழங்க கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம்வந்து அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு

சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். கும்பாபிஷேக விழாவில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மஹா கும்பாபிஷேகத்தைகண்டு அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மனையும், பரிவார தெய்வங்களையும் வழிபட்டுச் சென்றனர்.

error: Content is protected !!
Secret Link