Skip to content
Home » ஜிஎஸ்டி வரியை புகுத்தியதே விலைவாசி உயர்வுக்கு காரணம்… அமைச்சர் எவ.வேலு கண்டனம்.

ஜிஎஸ்டி வரியை புகுத்தியதே விலைவாசி உயர்வுக்கு காரணம்… அமைச்சர் எவ.வேலு கண்டனம்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில் ; மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே-யை உறுப்பினராக கொண்ட ஜனசங்கத்தின் மறு வடிவம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மற்றொரு குழந்தைதான் பாரதிய ஜனதா கட்சி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பாஜக மீது கடும் விமர்சனம்

செய்தார். ஒன்றியத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்ற போலி பிம்பத்தை கருத்து கணிப்பு என்ற போர்வையில் பிஜேபி அரசு செய்து வருகிறது. தமிழக முதல்வர் இந்தியா கூட்டணியை வலு சேர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த உடனே ஓன்றிய பிஜேபி அரசு IT மற்றும் ET ஆகிய துறைகளை கொண்டு திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்..

ஆனால் இந்த அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசு என்பதை மாநில மக்கள் உணர்ந்து விட்டனர் என பேசினார். அதனை தொடர்ந்து அமைச்சர் எவ வேலு பேசுகையில் ; ஒன்றிய அரசு கொண்டுவந்து திட்டங்களை தமிழக அரசு புறக்கணிப்பதாக பிரதமர் மோடி அண்மையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு போர்கால அடிப்படையில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது.

அதேபோல் ஓன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை மொழி தெரியாத மக்களிடையே திணிக்க முயற்சிப்பது நல்லதல்ல என கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில்...

2014ம் ஆண்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது இருந்த மாநில வரி விலைவாசி உயராமல் கட்டுப்படுத்தி வந்தோம்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2014 ஆம் ஆண்டு 20 ரூபாய் இருந்த அரிசி தற்போது 60 ரூபாய், 27 ரூபாய் இருந்த பாமாயில் 87 ரூபாய், 400 ரூபாய் இருந்த சமையல் எரிவாயு விலை 937 ரூபாய் உயர்வுக்கு பிஜேபி அரசு தான் காரணம் என விமர்சனம் செய்தார்

வரியை மாற்றங்கள் செய்கிற அதிகாரம் மாநில அரசுகளின் கையில் இருந்தபோது விலைவாசி உயர்வு இல்லை தற்போது அந்த அதிகாரத்தை GST வரி பறித்ததால் விலைவாசி விண்ணை எட்டும் தூரத்திற்கு உயர்ந்துவதாக கூறினார்.

தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பை பார்க்க வங்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் பாதிப்பை கண்டு வேதனை அடைந்தார். ஆனால் தமிழக முதல்வர் 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த போதும் ஒரு பைசா கூட ஓன்றிய அரசு வழங்க வில்லை என வேதனை தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு எப்போதும் பிரதமர் மோடி வந்தாலும் வணக்கம் என்றும், திருக்குறள் சொல்லியும் தமிழ் மீதும். தமிழக மக்கள் மீதும் தேர்தல் நேரம் என்பதால் அக்கறை செலுத்துகிறார்.

திமுக சார்பில் யார் வேட்பாளராக நிற்கிறார் என்பது கணக்கு அல்ல. தமிழக முதல்வர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றிபெற செய்வது மட்டுமே நமது இலக்கு என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!