Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழிகாட்டி நிகழ்ச்சி…..விடுதி மாணவர்களுடன்…. திருச்சி கலெக்டர் கலந்துரையாடல்

திருச்சி தந்தை பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12 ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.  கலெக்டர்  மா.பிரதீப் குமார் இதனை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  எஸ்.சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் த.அ. செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர்  ஐ. மகாராணி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குனர்  இஸ்மத் பானு,உயர்கல்வி ஆலோசகர் .அ. வாசுதேவன், பட்டய கணக்கு பயிற்சியாளர் அ. நாராயணன், கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!