Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பக்ரீத் பண்டிகை… எம்பி துரை வைகோ வாழ்த்து

இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கிய நிகழ்வாய் கருதப்படும் இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் பாலகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறைநம்பிக்கையும் பக்ரீத் பண்டிகையின் மையமாக விளங்குகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த அவர்களின் உண்மையான பக்தியை ஏற்று, ஒரு ஆட்டைப் பலியிட வழிவகுத்து, இந்த நிகழ்வை முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக்கினார். அந்த உன்னதமான தியாகத்தை போற்றி நினைவு கூர்ந்து, பக்ரீத் பெருநாளை கொண்டாடும் உலக தமிழ் முஸ்லிம்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். இப்ராஹிம் மற்றும் இஸ்மாயில் நபிகளாரின் தியாக உணர்வைப் பின்பற்றி, இறைவனின் பாதையில் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து, அன்பையும், ஈகை குணத்தையும் பரவச் செய்வோம். இந்த பக்ரீத் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும், ஆன்மீக வளத்தையும் தரட்டும்.
error: Content is protected !!